×
 

“பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அடுத்தடுத்து அவருக்கு எதிரான கண்டன  போஸ்டர்கள் ஓட்டப்பட்டு வருவதால் பரபரப்பு.

தொடர் தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலகிடு இல்லை என்றால்?..... என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மாநகரில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பிடித்தது.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கைப்பற்றிய பிறகு அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு  பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு அணி எடப்பாடிக்கு எதிராக பிரிந்து சென்று தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.  இவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர் ,  இதனால் விஜயின் ஆதரவு 144 என்று உயர்ந்தது.

அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்க கூடாது என அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தும்,  வேலுமணி சிபி சண்முகம் ஆதரவாளர்களான  25 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் க்கு  ஆதரவாக வாக்களித்தனர்.  இதனால் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர்களை எம்எல்ஏ-க்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

இந்த நிலையில்  கடந்த  சில தினங்களாகவே,  சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.  எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என புழெரிய அளவில் போஸ்டர்  அச்சிடப்பட்டு , சேலத்தில் அவரது வீடு  அமைந்துள்ள  பகுதியான  நெடுஞ்சாலை நகர் ,  சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டியிருந்தனர்.  இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு தற்போது மீண்டும் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் போஸ்டர் அச்சடித்து ,  சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளார்.

அதில் “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்.. நான்கு முறை தொடர் தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலகி விடு. இல்லை என்றால்? என கேள்விக்குறியோடு அதிமுக சுந்தரம் கன்னங்குறிச்சி என வாசகம் இடம் பெற்றுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தொடர்ந்து அவருக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...

இதையும் படிங்க: விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! தவெக வாங்கியது அதிமுகவின் ஓட்டு- ராஜேந்திர பாலாஜி காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share