ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு திருநெல்வேலி அல்வா, உப்பு அனுப்பும் போராட்டம்
அதிமுகவில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி இருவரையும் தலைமையாகக் கொண்ட ஒரு அணியும் பிளவு ஏற்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இரு குழுவினருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். குறிப்பாக சிவி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி விஜயபாஸ்கர் ஒலி டோர் இருக்கும் அணியினர் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அணியினர் சிவி சண்முகம் குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் இடம் தொடர்ச்சியாக மனு கொடுத்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்பொழுது செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் அறிவிப்பும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நெல்லையைச் சார்ந்த அதிமுக நலன் விரும்பிகள் சிலர் நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் இருவரும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிடும் வகையில் உப்பும், திருநெல்வேலி அல்வாவும் பார்சல் செய்து தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் விழுந்த இடி... பறிபோகும் எம்எல்ஏ பதவி? - வெளியானது ஷாக்கிங் தகவல்...!
எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி., சண்முகம் இருவரும் வளர்த்துவிட்ட அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள். அவர்கள் உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அல்வா கொடுக்க நினைத்த சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி குழுவினருக்கு இன்று நாங்கள் திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் உப்பு போன்றவற்றை அனுப்புகிறோம் என அதிமுக நலன் விரும்பிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!