தவெக அரசை ஓங்கி கொட்டிய நீதிமன்றம்... தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் கைது விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!
பி.ஆர். சுந்தரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்தது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்
பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை ஆலோசகருமான பி.ஆர். சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பி.ஆர். சுந்தரின் மனைவி அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக போலீசார் பெங்களூரு சென்று அவர்களைக் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று இரவு சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில், அதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி செந்தில் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடர்புடைய வழக்கு என்றும், கைது செய்வதற்கான எந்தவொரு நடைமுறையும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்... மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல்... எம்எல்ஏக்கள் மௌன அஞ்சலி..!!
எனவே, அவர்களை காவலில் வைத்து சிறையில் அடைக்க உத்தரவிடக் கூடாது என்றும் அவர் வாதிட்டார். அதேபோல், பி.ஆர். சுந்தரின் மனைவியை இந்த வழக்கில் சேர்ப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் தனது வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்றும், காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இருவரையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இருவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அவர்கள் நேற்று இரவே தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.
பி.ஆர். சுந்தர் மீது ஒரு பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் அவரை பெங்களூருவில் இருந்து கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அவருடைய மனைவியையும் இந்த வழக்கில் சேர்த்திருந்தனர். அவரது மனைவியை எவ்வாறு இந்த வழக்கில் சேர்க்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அவரை எப்படிக் கைது செய்து அழைத்து வந்தீர்கள் என்றும் கூறி, போலீசாரைக் கடிந்து கொண்டார்.
மேலும், கைது செய்வதற்கான எந்தவிதமான நடைமுறையையும் போலீசார் பின்பற்றவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். கைது நடவடிக்கை தொடர்பாக அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நடைமுறைகள்கூட முறையாகப் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, இருவரையும் உடனடியாக ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதன்படி, இருவரும் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் மாஸ்டர் மூவ்... விஜய்க்கு புதிய நிபந்தனை..!