×
 

பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தலைமையில் தவெக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தற்போதுள்ள கூட்டணியை தக்கவைத்து தேர்தலை எதிர்கொள்ள காய் நகர்த்தி வருகிறது. அதிமுக முதல் கட்டமாக பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல தனித்து தான் போட்டி என அறிவித்துவிட்டார். 

இதனிடையே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ள விஜய் இதற்கான பணிகளை தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: இனி இதுபோல நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுங்க முதல்வரே.. கொந்தளித்த தவெக விஜய்..!

சட்டமன்றத் தேர்தலில் தவெக-வின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2025-ல் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும். செப்டம்பர் முதல் டிசம்பர் 2025 வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் 12,500 கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனவே தமிழகத்தில் 4 முனை போட்டி என்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகள் தங்களது தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வியூகங்கள் வகுத்து வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்பதில் முன்னணி கட்சிகள் தீவிரமாக உள்ளன. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் சொந்தமாகவே கள ஆய்வு செய்து முடிவுகள் மேற்கொள்கின்றன.

தி.மு.க. "பென்" எனும் அமைப்பு மூலம் கள ஆய்வு செய்து முடிவுகளை எடுத்து வருகிறது. இது தவிர ஐபேக் மற்றும் ராபின்சர்மா தலைமையிலான இரு குழுக்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கள ஆய்வை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது.

அ.தி.மு.க.வும் சர்வந்த் தேவபக்தினி மற்றும் ஹரி கசவுல்யா ஆகியோர் கொண்ட குழு மூலம் 234 தொகுதிகளிலும் ஆய்வை நடத்தி வருகிறது. இந்த குழு அ.தி.மு.க.வுக்காக 200 பேரை களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 2011-ம் ஆண்டு முதல் 11 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் இந்த குழுவின் ஆய்வுகள் மற்றும் வகுத்து கொடுத்த வியூகங்கள் வெற்றி தேடி கொடுத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேர்தல் வியூகத்துக்காக குழு வைத்து இருப்பது போல புதியதாக கட்சி தொடங்கிய விஜய்யும் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக வகுப்பாளராக சேர்த்துக் கொண்டார். சமீபத்தில் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இதையடுத்து 234 தொகுதிகளிலும் விஜய்க்காக பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழு ஆய்வு செய்து வந்தது. 

இதையும் படிங்க: சாதித்த பழங்குடியின மாணவி.. கல்வி விருது விழாவில் விஜய் கொடுத்த அன்பு பரிசு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share