NDA வுடன் கூட்டணியா? இழுபறி நடக்குதா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..!
கூட்டணி தொடர்பான கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கூட்டணி குறித்த முடிவை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தி வருகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அந்தக் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்போது அந்த முடிவு தாமதமடைந்து, கட்சி நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.
கூட்டணி தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கூட்டணி பேச்சு வார்த்தையில் எந்த தாமதமும் இல்லை என்று தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? பியூஷ் கோயலுடன் சந்திப்பா? பிரேமலதா விஜயகாந்த் பிரஸ் மீட்..!
தேசிய ஜனநாயக கூட்டணி இல்லையா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் நேற்றைய பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தேமுதிகவின் நலன் கருதி ஒரு தாயாக நல்ல முடிவை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பிளவு..! தேமுதிக எங்க பக்கம் தான்... ராஜேந்திர பாலாஜி கணிப்பு..!