×
 
☰

ஏவுகணை நாயகர் அப்துல் கலாம் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

பாரத ரத்னா டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, வடகோடியில் தமிழர்களின் பெருமையை உலகறிய நிலைநாட்டிய மக்களின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்" என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்ற விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் 'இளைஞர் எழுச்சி நாளாக'க் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கலாமின் சாதனைகளையும் சிந்தனைகளையும் போற்றி உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் தென்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, வடகோடியில் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மக்களின் குடியரசுத் தலைவர்!

'சாதிக்க வேண்டும்' என்ற தீராத கனவும், 'உறுதியாக சாதிப்போம்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், அதற்கான ஓயாத கடின உழைப்பும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதற்கு நிஜ உதாரணமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற ஏவுகணை நாயகர்!

இதையும் படிங்க: தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

'கனவு காணுங்கள்' என்ற உன்னத வரிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் நம்பிக்கையை விதைத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில்...

அவர் நமக்காக வகுத்துத் தந்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து, வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்! என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தின் எளிய மீனவக் குடும்பத்தில் பிறந்து விண்வெளி ஆய்வு மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்து, குடியரசுத் தலைவராக உயர்ந்த கலாமின் வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு என்றும் வழிகாட்டும் விளக்காக அமையும் என அவரது பதிவில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share