“என் சாவுக்கு காரணம் கெளதம்...”... லவ் டார்ச்சரால் புடவையில் தூக்கிட்டு ஆசிரியை தற்கொலை... சிக்கியது 4 பக்க தற்கொலை கடிதம்...!
காதல் டார்ச்சரால் தனியார் பள்ளி ஆசிரியை நான்கு பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது அழகனூர் ஆசாரி பட்டறை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் சண்முகப்பிரியா ( 22 ) பிஇ அக்ரி படித்துவிட்டு தற்போது தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சண்முகப்பிரியா வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனிடையே சண்முகப்பிரியா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் (ஞானமணி கல்லூரி) படிக்கும்போது சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களில்
கௌதமின் நடவடிக்கை சரியில்லாததால் சண்முகப்பிரியா காதலை கைவிட்டு இருப்பினும் தொடர்ந்து கௌதம் சண்முகப்பிரியாவிற்கு காதல் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் செல்போனில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடுவேன் என கூறி சண்முகப்பிரியாவை கௌதம் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முகப்பிரியாவிற்கு உறவினர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனை அறிந்த கௌதம் திருமணத்தை தடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாலை விபத்தில் மகன் மரணம்...! துக்கம் தாளாமல் பெற்றோர் தூக்கிட்டு கொண்ட சோகம்..!
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சண்முகப்பிரியா அவரது வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் சண்முகப்பிரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சண்முகப்பிரியா தனது சாவிற்கு கௌதம் தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆங்கிலத்தில் நான்கு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனை மகுடஞ்சாவடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் சண்முகப்பிரியாவின் செல் போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பிள்ளை அருகே லவ் டார்ச்சர் காரணத்தால் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!