முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
வரும் 29ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
தற்போது முக்கிய பிரச்சினையாக வாக்காளர் சிறப்பு திருத்தம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் திருத்தம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை... என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை...!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 29ஆம் தேதி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சனிக்கிழமை காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி... இதையெல்லாம் செய்யணும் பா.! உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!