×
 

இனி ஒரிஜினல் குடுக்கணும்..! தமிழக அரசின் பத்திரப்பதிவு மசோதா... குடியரசு தலைவர் ஒப்புதல்..!

தமிழக அரசின் பத்திரப்பதிவு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் அசையா சொத்துக்களின் பத்திரப் பதிவு செயல்முறையை மிகவும் வலுவாகவும் வெளிப்படையாகவும் மாற்றும் நோக்கத்தில் ஒரு முக்கியமான சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவின் மையக் கோட்பாடு, சொத்து விற்பனை அல்லது பிற வகை பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் முந்தைய அசல் ஆவணம் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்பதாகும்.

இதன் மூலம் ஆவண மோசடி, போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் போன்றவற்றை தடுத்து பொதுமக்களின் சொத்து உரிமையை பாதுகாக்க முயல்கிறது அரசு.இந்த மசோதா 2025 ஏப்ரல் மாத இறுதியில் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி இதை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு, தமிழ்நாடு பதிவு விதிகளில் 55-A என்ற விதி இருந்தபோதிலும், அசல் ஆவணம் தாக்கல் செய்வது கட்டாயமில்லாமல், பல சந்தர்ப்பங்களில் நகல் ஆவணங்கள் அல்லது மாற்று ஆதாரங்களை கொண்டு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

ஆனால், போலி ஆவணங்கள் மூலம் சொத்து மோசடிகள் அதிகரித்து வருவதாலும், உச்ச நீதிமன்றத்தின் சில அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊர்திகள்..! களைகட்டிய நிகழ்ச்சிகள்..!

இதன் மூலம், மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டும். சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து கண்டறியமுடியவில்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #BREAKING: புத்தாண்டு சர்ப்ரைஸ்... அரசு ஊழியர்களுக்கு போனஸ்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share