×
 

+2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

+2 மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறையை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் டூ மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மாணவி பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிலிருந்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக தனியாகச் சென்றுள்ளார்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் திரும்பாததால், பெற்றோரும் உறவினர்களும் தேடியபோது கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் முகத்தில் பலத்த காயங்கள், சிதைவுகள் இருந்ததுடன், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்ததாக கூறப்பட்டுள்ளது. கொலை மிகவும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக கிராம மக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டினர்.

மாணவி காணாமல் போனதை அறிந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், அங்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகாரை ஏற்க மெத்தனமாக நடந்து கொண்டதாகவும், காவல் ஆய்வாளர் அவதூறாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோபமடைந்த பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், காவல்துறையின் ஆரம்பக் காலதாமதம் மற்றும் மெத்தனப் போக்கு காரணமாகவே இந்தக் கொலை நடந்ததாகக் கருதிய பெற்றோரும் உறவினர்களும், உடலைப் பெற்றுச் செல்ல மறுத்து மருத்துவமனை பிணவறையை முற்றுகையிட்டனர்.

இதையும் படிங்க: மடப்புரம் அஜித் கொலை வழக்கு... என்ன நடந்துச்சு? நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா ஆஜர்..!!

இதனிடையே, சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள சாலையில் உறவினர்களும் கிராம மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இந்தப் போராட்டம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share