×
 

தச்சங்குறிச்சியில் ஜன.3 ஆம் தேதி ஜல்லிக்கட்டு... தமிழக அரசு அரசாணை வெளியீடு...!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

தமிழ்நாட்டின் கிராமிய வாழ்வில் ஆழமாக வேரூன்றிய ஒரு தொன்மையான பாரம்பரியம் தான் ஜல்லிக்கட்டு. இது வெறும் விளையாட்டு அல்ல; தமிழர்களின் வீரத்தை, திமிரை, கலாச்சார அடையாளத்தை உலகறியச் செய்யும் ஒரு கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இந்த வீர விளையாட்டு, பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாக, மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம். காளையின் திமிலைத் தழுவி அடக்கும் இளைஞர்களின் துணிச்சல், அச்சமற்ற தன்மை ஆகியவை தமிழ் மண்ணின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.

பொங்கல் கொண்டாட்டங்களுடன் இணைந்த ஜல்லிக்கட்டு, அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடுகளை போற்றும் ஒரு விழாவாக உருவெடுத்தது. விவசாய வாழ்வில் மாடுகள் முக்கிய பங்கு வகித்ததால், அவற்றின் வலிமையைப் பெருமைப்படுத்தும் விதமாக இது நடத்தப்பட்டது. கங்கையம், புலிகுளம், உம்பளச்சேரி போன்ற உள்நாட்டு காளை இனங்களைப் பாதுகாக்கும் ஒரு முறையாகவும் ஜல்லிக்கட்டு செயல்பட்டது. இன்றும் இந்த இனங்கள் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றன.

அவை உயர்ந்த விலைக்கு விற்பனையாகின்றன. ஜல்லிக்கட்டின் பெருமை அதன் கலாச்சார முக்கியத்துவத்தில் உள்ளது. இது தமிழர்களின் அடையாளமாக, தமிழ் பெருமையாக விளங்குகிறது. கிராமிய சமூகத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் நடக்கும் போட்டிகள் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றன. 

இதையும் படிங்க: விறுவிறு SIR... புதுக்கோட்டையில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்... ஆட்சியர் அறிவிப்பு...!

இந்த நிலையில், அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் அனுமதி கோரியிருந்தனர். 2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதையும் படிங்க: 2026 ஜல்லிக்கட்டு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share