×
 

புதுக்கோட்டையில் பரபரப்பு… பூசாரிகளிடையே மோதல்! திணறும் அறநிலையத்துறை அதிகாரிகள்

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் யார் முதலில் பூஜை நடத்துவது என்பதில் பூசாரிகளிடையே மோதல் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை நகருக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், தமிழகத்தின் மிகவும் பழமையான மற்றும் சக்தி வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தக் கோவில், 500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் காவல் தெய்வமாக முனீஸ்வரர் வணங்கப்படுகிறார். இந்தக் கோவிலின் தனித்துவமான வரலாறு, ஆன்மீக முக்கியத்துவம், மற்றும் சுவாரசியமான தகவல்கள் இதனை பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக்கியுள்ளன.

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களை ஈர்க்கும் ஒரு முக்கியமான ஆன்மீகத் தலமாக உள்ளது.

இதையும் படிங்க: ஆடி முதல் செவ்வாய்.. நினைத்ததை நிறைவேற்றும் அவ்வையார் அம்மன் கோவிலில் குவிந்த பெண்கள்..!!

இந்த கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்ற வருகிறது. கோவிலுக்கு உரிய நாற்பதுக்கும் மேற்பட்ட பூசாரிகள் ஒன்று கூடினர். இதில் யார் முதலில் பூஜை செய்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

பூசாரிகளுக்குள் ஏற்பட்ட போட்டி மோதலாக மாறி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை எடுத்து பக்தர்கள் அனைவரையும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெளியேற்றினர்.

பூசாரிகளை சமாதானப்படுத்த முயற்சித்தும் ஒருவரை ஒருவர் சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான் பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி திருவிழாவில் கோவிலுக்குரிய நாற்பது பூசாரிகளும் ஒன்று கூடியதால் யார் பூஜை செய்யப்போவது என போட்டி ஏற்பட்டுள்ளது. பூசாரிகள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய பாலியல் சம்பவம்.. 1ம் ஆண்டு அமைதி பேரணி.. தடியடி நடத்திய போலீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share