×
 
☰

கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் முக்கிய அரசு நிறுவனமாக விளங்கும் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பிற்கு புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனம் தமிழகத்தின் கிராமிய இசை மரபை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தில் பிறந்த குப்புசாமி, சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை, எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற அவர், சத்யபாமா பல்கலைக்கழகத்திலிருந்து கெளரவ முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கர்நாடக இசைப் பின்னணியுடன் நாட்டுப்புறப் பாடல்களை இணைத்து புதிய பரிமாணம் தந்தவர் இவர்.அவரது மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தியுள்ளார். இருவரும் சேர்ந்து பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளனர்.

மண்மணம் மாறாத கிராமியப் பாடல்களை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை இவர்களுக்கு உண்டு. திரைப்படங்களிலும் பின்னணிப் பாடகராக பங்களித்துள்ள குப்புசாமி, இளையராஜா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும் பாடகராகவும் தோன்றியுள்ளார். நாட்டுப்புற இசையை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல் சமூகச் செய்திகளைக் கொண்ட கலையாக மாற்றியதில் அவரது பங்கு முக்கியமானது.

இதையும் படிங்க: எகிறும் விலைவாசி... அலட்சியமாக வேடிக்கை பார்ப்பதா.? தவெக அரசை வெளுத்த TTV தினகரன்..!!

கிராமங்களின் வாழ்க்கை, உழைப்பு, மகிழ்ச்சி, துயரம் ஆகியவற்றை பாடல்களில் பதிவு செய்துள்ளார்.இயல், இசை, நாடக மன்றம் கலைமாமணி விருதுகள் வழங்குவது, நலிந்த கலைஞர்களுக்கு உதவித் தொகை அளிப்பது, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இந்த மன்றத்தின் தலைவராக ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞர் நியமிக்கப்படுவது, கிராமியக் கலைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share