×
 

பெண் காவலரை கொடூரமாக தாக்கிய கைதி! இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நடவடிக்கை..!

சென்னை புழல் சிறையில் காவலரை தாக்கிய வெளிநாட்டு கைதி மோனிகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் பெண் காவலரை கைதி மோனிகா என்பவர் சரமாரியாக தாக்கியதாக இதனால் பலத்த காயம் அடைந்த பெண் காவலர் சரஸ்வதி என்பவர் ஸ்டான்லி ஆர் எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கண் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில், வெளிநாட்டு கைதி மோனிகா மீதும் சிறைத்துறை தலைவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். சிறையில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கதறி அழுத வீடியோ வெளியானது. இந்த நிலையில் பெண் கைதி மோனிகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பெண் கைதி இருப்பதாக தெரிகிறது. அவர் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மோனிகா என்ற அந்த சிறைவாசி தன்னை தாக்கியதாக பெண் காவலர் சரஸ்வதி குற்றம் சாட்டி இருந்தார். 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சரஸ்வதி மோனிகா என்ற கைதி தாக்கியதாக தெரிகிறது. இதனால் முகத்தில் பலத்த காயமடைந்த சரஸ்வதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பேசிய காவலர் சரஸ்வதி, மோனிகா சிறையில் ராணி போல் வலம் வருவதாக குற்றச்சாட்டி உள்ளார்.

காவலர்களை மோனிகா தகாத வார்த்தையால் திட்டுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். மோனிகா மீது சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காவலர் புகார் தெரிவித்தார்.  மோனிகாவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் எளிதில் கிடைப்பதாகவும் சிறைத்துறை தலைவர் மகேஸ்வர் தயால் அவருக்கு உதவுவதாகவும் எந்த விவகாரமாக இருந்தாலும் சிறைத்துறை தலைவரை மோனிகா நேரில் அணுகி பேசுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் சிறைத்துறை தலைவரின் போனிலிருந்து மோனிகா வெளியில் பேசுவதாகவும் ஏற்கனவே பல காவலர்களை மோனிகா தாக்கியிருப்பதாகவும் கடும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த நிலையில், கைதி மோனிகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலரை தாக்கியதாக புகார் எழுந்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதி அட்ராசிட்டி.. தாக்குதலுக்கு உள்ளான காவலர் கதறல்..!

இதையும் படிங்க: நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்! போலீஸ் ஸ்டேஷனிலேயே மிரட்டல்... களி திண்ண வைத்த போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share