×
 

மீண்டும் அவமதிப்பு?! 2026 குடியரசு தினவிழா! 3ம் வரிசையில் ராகுல்காந்திக்கு இருக்கை!

டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 77வது குடியரசு தின விழா டெல்லி கடமைப் பாதையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை ஒதுக்கீடு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல் இரண்டு வரிசைகளில் மத்திய அமைச்சர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அமர்ந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களான கார்கே மற்றும் ராகுல் காந்தி மூன்றாவது வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

இது 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் குடியரசு தின விழாவாகும்.

இதையும் படிங்க: 15 நிமிடத்தில் 1,500 கி.மீ!! எதிரி கண்ணில் சிக்காமல் தாக்கும் சூரன்!! குடியரசு தினத்தில் அறிமுகமாகும் LRAShM!

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் பதக்க வீரர்களுக்கு நடுவே கடைசி இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமருக்கு அடுத்த பதவியில் இருப்பவராகவும் உள்ள ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை கூட வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.

இதனால் கடந்தாண்டு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களில் செங்கோட்டையில் கலந்து கொள்ளாமல், காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிய விழாக்களில் மட்டுமே ராகுல் காந்தி பங்கேற்றார்.

இந்நிலையில் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு மீண்டும் பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அரசு நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது.

குடியரசு தின விழாவின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் நிகழ்வில் இத்தகைய இருக்கை ஒதுக்கீடு அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இருக்கை ஒதுக்கீடு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. இது தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: வரலாற்றில் முதன்முறை!! ஆண்கள் பிரிவை வழி நடத்தும் பெண் கமாண்டன்ட்! ஒரிஜினல் சிங்கப்பெண்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share