மிஷன் 2029-க்கு விஜய் ரொம்ப முக்கியம்!! திமுகவை மொத்தமாக முடித்துக் கட்ட தயாராகும் ராகுல் காந்தி! அடுத்த அரசியல் மூவ்!
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்துப் பேச எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், தேசிய மற்றும் மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தை அகில இந்திய அளவிலான இந்தியா (INDIA) கூட்டணியில் இணைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் சில மூத்த தலைவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தியும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் "மிஷன் 2029" திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில், மாமல்லபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் செல்லக்குமார் பங்கேற்று, எதிர்கால அரசியல் வியூகங்கள் மற்றும் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி - விஜய் சந்திப்பு உறுதி?! I.N.D.I.A கூட்டணியில் இணைகிறது தவெக? புதிய அரசியல் கணக்கு!
இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். அவரது சென்னை வருகையின்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து முக்கிய அரசியல் ஆலோசனை நடத்தலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.
விஜய் மற்றும் ராகுல் காந்தி இடையே ஏற்கனவே நல்ல தனிப்பட்ட நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றதுடன், பின்னர் டெல்லியில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். மேலும், நீட் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட அறிக்கையும் இரு தரப்புக்கும் இடையேயான அரசியல் நெருக்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்த அரசியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தை இந்தியா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைப்பது குறித்து விஜய்யுடன் ராகுல் காந்தி ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பது அல்லது திமுக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம் அல்லது திமுக சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இவை அனைத்தும் தற்போது அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. ராகுல் காந்தியின் சென்னை பயணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறக்கூடிய சந்திப்புகள் தமிழக அரசியலில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1! முதல்வர் விஜய் உடன் ராகுல்காந்தி சந்திப்பு?! அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!