×
 

ட்ரம்புக்கு மோடி.. அமித்ஷாவுக்கு எடப்பாடி..! டெல்லியிலிருந்து ஆள நினைக்கிறாங்க..! ராகுல் காந்தி விளாசல்..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் திருவள்ளூரில் ராகுல் காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி செய்த மசோதாவை தோற்கடித்து விட்டோம் என்ற ராகுல் காந்தி தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்து தான் இந்தியாவின் என்ற நாடு எனக் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப்க்கு மோடி போல் அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் டெல்லியில் இருந்து பாஜக ஆள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். தமிழர்களையும் தமிழையும் பாஜகவில் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார். தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் ஒருபோதும் அது ஈடேராது எனவும் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பிஜேபியால் அழிக்க முடியாத தொட முடியாத ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை கொண்டது. தமிழ் என்றும் தெரிவித்தார். சமூக நீதி என்றால் என்ன என்பதை சுட்டிக்காட்டிய மாநிலம் தமிழ்நாடு என்றும் குறிப்பிட்டார். பெண்கள் பாதுகாப்பிலும் தமிழ்நாடு இந்தியாவுக்கு முன்னோடி என்று கூறினார். தமிழ்நாட்டின் மக்களுக்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெரிய சிக்கலில் ராகுல்காந்தி! FIR போட்டு விசாரிங்க! அதிரடி காட்டிய அலகாபாத் ஹைகோர்ட்!

தமிழ்நாட்டின் மக்கள் மீதும் தமிழ் மீதும் எனக்கு அளவு கடந்த அன்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார். தான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் எனது குடும்பம் இங்கு இல்லாவிட்டாலும் தனது உணர்வு இங்கு ஒன்று இருக்கிறது எனவும் கூறினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதையும் குறிப்பிட்டு பேசினார். மகளிர்க்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் வாக்குறுதிகளை வெளியிட்டார் ராகுல் காந்தி. 

இதையும் படிங்க: பிரதமரை மந்திரவாதி எனக் கூறுவதா..? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share