உடைக்கப்பட்ட பூட்டு... உள்ளே நுழைந்த அதிகாரிகள் - அல்லிநகரம் நகராட்சி ஆணையர் வீட்டில் சோதனை...!
தேனி நகராட்சி ஆணையர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையராக ஏகராஜா என்பவர் கடந்த ஏழு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேனி பொம்மையகவுன்டன்பட்டி நகராட்சி குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின்  இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
தற்போது மருத்துவ விடுமுறையில் ஏகராஜா வெளியூர் சென்றிருப்பதால், பொம்மையகவுண்டன்பட்டியில்  நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள அவரது பூட்டிய வீட்டை அருகிலுள்ள ஊழியர்கள் முன்னிலையில் திறந்து சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: வரி ஏய்ப்பில் சிக்கிய JAN DE NUL.. கடல் சார் கட்டுமான நிறுவனத்தில் அதிரடி ரெய்டு!
தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஏகராஜாவின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள பீரோ பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சோதனையின் முடிவில் தான் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்ற விவரம் தெரியவரும். மேலும் ஆணையர் ஏகராஜாவின் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சொந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!
 by
 by
                                    