தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் பாளையங்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எங்க தினமும் ஏராளமான மக்கள் சொத்துக்கள் வாங்க விற்க வருகின்றனர்.
அதிகளவில் லஞ்சம் இந்த அலுவலகத்தில் நடைபெறுவதாக நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார்கள் வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று மதியம் 3:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் பத்திரப்பதி அலுவலகத்திற்கு புகுந்து சோதனை நடத்த தொடங்கினர்.
இதையும் படிங்க: மக்களை அமர வைக்கனும்..! சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!
அப்பொழுது அங்கிருந்த புரோக்கர்கள் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தினர்.
மேலும் அலுவலர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான ஆவணங்கள் முறையாக இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து கணினியில் உள்ள ஆவணங்கள், அலுவலர்களிடம் பாக்கெட்டுகளில் இருந்த பணம் உள்ளிட்ட அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இதே போல் வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் மைதிலி ஆகியோர் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராசிபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் மற்றும் ரொக்க பணம் குறித்து விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த பொதுமக்களிடம் அதிகாரின் லஞ்சம் பெற்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் தூத்துக்குடி உள்ள கீழூர் சார் பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரமசிங்கபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடைபெற்று வருவதால் பத்திரப்பதிவுக்கு சென்ற மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ எஸ் பி எஸ் கால் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை. அலுவலக நுழைவாயில் கேட்டை லஞ்சு ஒழிப்பு போலீசார் மூடியதோடு, அலுவலக வளாகத்தில் இருந்த பொதுமக்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள்?, பத்திரப்பதிவிற்காக அலுவலர்கள் பணம் ஏதும் கேட்டார்களா?, பெற்றார்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்பெக்டர்கள் ஹேம மாலினி அருள் பிரசாத், சப்இன்ஸ்பெக்டர் மதன் மோகன் கண்காணிப்பாளர் தலைமையில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக கணக்கில் வராத ரூபாய் 85,000 பணம் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவிதுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பத்திர பதிவு அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விருத்தாச்சலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீரென, அலுவலகத்தில் சோதனை செய்து வருவதால் பரபரப்பு.
இதையும் படிங்க: Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!