×
 

2025ல் ரயில்களில் விதிமீறல்... 2 கோடி அபராதமாக வசூலிப்பு... ரயில்வே துறை அறிவிப்பு...!

2025 ஆம் ஆண்டு ரயில்வே துறையில் 2 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரயில்வே சட்டம் 1989இன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு பயணி பிடிபட்ட இடத்திலிருந்து ரயில் தொடங்கிய இடம் வரையிலான முழு கட்டணத்துடன் குறைந்தபட்சம் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஸ்லீப்பர் வகுப்பில் பாட்னாவிலிருந்து பக்ஸாருக்கு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், 100 ரூபாய் கட்டணத்திற்கு 350 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 2025இல் இந்த விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டன, குறிப்பாக மீண்டும் மீண்டும் விதிமீறுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், புகை பிடித்தல், குப்பை வீசுதல், அவசர சங்கிலி இழுத்தல் போன்ற பிற விதிமீறல்களுக்கும் அபராதங்கள் உயர்த்தப்பட்டன.

விதிமீறல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், இருக்கைகளுக்கான தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையிலான இடைவெளி. பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகரிப்பதால் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்கள் எண்ணிக்கை உயர்கிறது. இதனிடையே, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், விதிமீறல்களில் ஈடுபட்ட பயனர்களிடம் இருந்து சுமார் 2 கோடியே 9 லட்சம் ரூபாய், அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ரயில் கட்டண உயர்வு... பயணிகளை சாலைக்கு துரத்திய மோடி அரசு... MP சு. வெங்கடேசன் கண்டனம்...!

ரயில் தண்டவாளங்களை கடந்து செல்வது, ரயில்களில் படி மற்றும் மேற்கூரையில் பயணம் செய்வது, ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்வது, போலி டிக்கெட் ஏஜெண்ட் மீது நடவடிக்கை உட்பட மொத்தம் 50,949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 50,486 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: 3 கோடிக்கும் அதிகமான ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் முடக்கம்... ரயில்வே எடுத்த பரபரப்பு முடிவு... காரணம் என்ன? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share