×
 

இனிமே தான் ஆட்டமே இருக்கு... உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை... வெளுக்கப்போகுது மழை...!

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. 10 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு மழை அதிக அளவில் பெய்யவில்லை. இந்த நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வலுபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேல் காற்று சுழற்சி சரமாரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டு உள்ளது . இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வரும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கடமலை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பகல் 12 மணிக்கே கடையெல்லாம் மூடுங்க.. புதுவை அரசு அதிரடி உத்தரவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு... ஆனா பிளான் மாறிடுச்சு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share