×
 

சுழற்றி அடிக்கும் மழை... புயலாக மாறுமா? வானிலை மையத்தின் மண்டல தலைவர் அமுதா முக்கிய தகவல்...!

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா பேட்டியளித்தார்.

வடகிழக்கு பருவமழை தூங்கி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது உள்ள வானிலை நிலவரம் தொடர்பாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது குறித்தும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று தெரிவித்தார். அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது என தெரிவித்தார். புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது நாளை தெரியும் என கூறினார். வட தமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தீவிரமடைந்துள்ளது நான்கு இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது என்றும் கூறினார். தமிழகத்தில் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகரும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி... நீர் திறப்பு? முக்கிய அப்டேட்..!

தற்போது வரை 59 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது என்று கூறிய அமுதா, பத்து சென்டிமீட்டர் இயல்பு மழை அளவு எனும் நிலையில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றார். 23ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். புயலாக மாறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "HIGH ALERT"... ப்ளீஸ் திரும்பி வந்துடுங்க... நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share