×
 

வெளுத்து வாங்க போகுது மழை... அனாவசியமா வெளிய வராதீங்க மக்களே..!

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பது தொடர்பான முழு விவரத்தை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தீபாவளி தினமான நாளை 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்தது.

மேலும்,தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெயர் கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 22 ஆம் தேதி கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொட்டி தீர்க்கும் கனமழை... அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... சுற்றுலா பயணிகளுக்கு தடை...!

தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அக்டோபர் 22ஆம் தேதி கனமழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், அக்டோபர் 24ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உஷார்... அடிச்சு நகர்த்த போகுது... 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share