×
 

வானிலை எச்சரிக்கை..! சென்னை உட்பட 6 மாவட்டங்களில் கனமழை..! உஷார் மக்களே..!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. நேற்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்ன தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் 26 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டது இதற்கிடையில், சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: குடை எடுத்துட்டு போங்க மக்களே..! ஏழு மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுவயிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆரஞ்சு அலர்ட்... அடிச்சு நகத்த போகுது மழை..! உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share