×
 

உஷார் மக்களே..! புரட்டி எடுக்க போகும் மழை.. வலுவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கவுள்ளது...

மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை- தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலைகொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 27 ஆம் தேதி நெருக்கத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அட்டூழியம்... அதிரடி ஆணை பிறப்பித்த காவிர் நீர் மேலாண்மை ஆணையம்!!

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கேரளா, கர்நாடகாவில் 28ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்றும் அப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குமரி கடலூரப் பகுதிகளில் 18 வினாடிக்கு ஒரு முறை 1.1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழ வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பேரணிகள் எழுவதால் கடலோரத்தை ஒட்டிய சில மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தீவிரமடையும் மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share