×
 

#weatherupdate: குடை கொண்டு போங்க மக்களே...வெளுக்க போகுது மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்க பருவமடை நேற்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். ஒவ்வொரு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

இன்று நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதையும் படிங்க: மக்களே உஷார்... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்.. 3 நாட்களுக்கு பேய் மழை இருக்காம்...!

இதனிடையே, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: குடை எடுத்தாச்சு... 11 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share