13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறியது. இதன் காரணமாக நேற்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: மழை பிச்சு உதறப்போகுது! மக்களே உஷார்... வானிலை மையம் கொடுத்த புது அப்டேட்
இந்த நிலையில், தமிழகம், புதுவை, காரைக்காலில் செப்டம்பர் 13 முதல் 17ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நவம்பர், டிசம்பரில் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... எச்சரித்த வெதர்மேன்...!