×
 

செம்ம மழை காத்திருக்கு..! இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருந்துக்கோங்க..!

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை தற்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷாக் அடிக்க போகுதா மின் கட்டணம்.? ஜூலை முதல் கட்டணம் உயர்வு..? திமுக அரசை வறுத்தெடுக்கும் ராமதாஸ்.!!

தென் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் சூறாவளிக்காற்று வீசும் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share