தீவிரமடையும் மழை..! 8 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்..!
தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை தற்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!
இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!