×
 

எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

அதிமுக அடிமை கட்சி என்று திமுகவினர் விமர்சனம் செய்து வருவதற்கு ராஜன் செல்லப்பா பதிலடி கொடுத்தார்.

பாஜகவிற்கு அதிமுக அடிமையாக இருக்கிறது என்று திமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணி கட்சி யாரும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். தற்போது தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணி என்றால் ராயப்பேட்டையில் வைத்து தானே தொகுதி பங்கீடு பேசியிருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதிலிருந்தே பாஜகவிற்கு அதிமுக அடிமை ஆகிவிட்டது என்பது தெளிவாகிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை அடிமை கட்சி என்று சொல்லி வருகிறார்கள் என்றும் எந்த வகையில் அதிமுக அடிமையாகி இருக்கிறது எனவும் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

இதுவரை எதை விட்டுக் கொடுத்து இருக்கிறோம் என்றும் எந்த உரிமையாவது விட்டுக் கொடுத்து இருக்கிறோமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி எதையும் அதிமுகவும், எடப்பாடி பழனிச்சாமியின் விட்டுக் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் அதிமுக மீது குறை சொல்ல எதுவும் இல்லை என்பதால் இவ்வாறு பேசுவதாகவும், இதுபோல பேசுபவர்கள் அமைச்சர் நேரு போன்றவர்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

அடிக்கடி டெல்லி செல்வது குறித்து பேசுகிறார்கள் ஏன் அவர்களது ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்து விடுவார்களா என்ற அச்சம்தான் எனவும் கூறியுள்ளார். தொகுதி பங்கீடு விவகாரத்தை பற்றி பேசிய அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: போலி பெண் விடுதலை... முகத்திரை கிழிஞ்சது..! வெளுத்து வாங்கிய வளர்மதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share