×
 

மகள்களுடன் ஜனநாயக கடமையாற்றிய ரஜினி, கமல், குஷ்பு... சென்னையில் விறுவிறுப்பாகும் நட்சத்திரங்களின் வாக்குப்பதிவு...!

கடுமையான வெயில் காரணமாக முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வக்காளர்கள் உள்ளனர். 

கடுமையான வெயில் காரணமாக முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். சேலம் சிலுவம்பாளையத்தில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். குடும்பத்தினருடன் சென்று, எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வெள்ளை கோட் சூட், கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்து வாக்களித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள SIET கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, பேரன் இன்பநிதி ஆகியோருடன் வரிசையில் காத்திருந்து மக்களோடு மக்களாக வாக்களித்தார். 

இதையும் படிங்க: விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுடன் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார். தேனாம்பேட்டையில் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வாக்குச்சாவடியில் இயக்குநரும் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளருமான சுந்தர்.சி, மனைவி குஷ்பூ மற்றும் முதல் முறையாக வாக்கு செலுத்தும் தனது மகள் ஆனந்திதாவுடன் வந்து வாக்களித்தார். 

இதையும் படிங்க: “தவறான அவதூறுகளை பரப்பக்கூடாதுன்னு...” - ரஜினி குறித்து ஆதவ் கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share