×
 

காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!

ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, ஒரு பொதுக்கூட்டம் அல்லது போராட்ட நிகழ்ச்சியில் பேசியபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது திமுக குடும்பத்தால் மிரட்டப்பட்டதாகவும், அதனால் அவர் அரசியல் பயணத்தை கைவிட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.அவர் மேலும் தொடர்ந்து, எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பெருமக்களைக் கொண்ட நடிகராக ரஜினிகாந்த் இருந்தார் என்றும், ஆனால் அவருக்கு அப்போது திமுகவின் அழுத்தங்களைத் தாங்கும் மனவலிமை இல்லாமல் போனதால் அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறினார்.

இதற்கு மாறாக, தவெக தலைவர் விஜய்க்கு அத்தகைய மனவலிமை இருப்பதாகவும், அதனால் அவர் அழுத்தங்களை எதிர்கொண்டு அரசியலில் தொடர்ந்து செயல்படுவதாகவும் ஆதவ் அர்ஜுனா ஒப்பிட்டுப் பேசினார். ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியலில் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன்,, புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், ரசிகப் பெருமக்கள் என அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share