சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் இப்படியா? - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீயை பற்ற வைத்த ரஜினி ரசிகர் மன்றம்... அதிரடி அறிவிப்பு...!
திருப்பரங்குன்றம் கிராம மக்கள் ஒரு பிரிவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றக்கோரி கிராம மக்கள் சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் ரஜினி மன்றம் சார்பாக ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது. ஆனால் அரசு தரப்பில் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் சென்று இருப்பதால் அனுமதி மறுப்பு தெரிவித்து காவல்துறை மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்றுவதை தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் 48 கிராமங்கள் சேர்ந்து மலை உச்சியில் கார்த்திகை தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் . உண்ணாவிரத போராட்டம் இருக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் கிராம மக்கள் சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: ”தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டு பண்ண முயற்சி” - பாஜக - அதிமுக வேஷத்தை கலைத்த அமைச்சர் சேகர் பாபு...!
அதனைத்தொடர்ந்துநீதிமன்றம் 18 வழிகாட்டுதல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்தது . திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோரி நாளை 13ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த நீதிமன்றம் சென்று நிபந்தனைகளுடன் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் ஒரு பிரிவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஜினி மன்றத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ப போவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பரங்குன்றம் ரஜினி மன்றம் நகரச் செயலாளர் கோல்டன் சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், நாங்கள் மதவாதிகள் அல்ல, ஆன்மீகவாதிகள் அதை தான் தலைவரும் சொல்லிக் கொடுத்துள்ளார். துர்கா ஸ்டாலின் கூட ஆன்மீகவாதி தான் அவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ரஜினி நகர் மன்றம் சார்பாக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மத ரீதியிலான மோதல்களை உருவாக்க இந்து அமைப்புகள் முயன்று திட்டமிட்டு வருவதாக திமுக தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இன்றைய நாளில் இப்படியொரு அறிவிப்பை அவரது ரசிகர் மன்றத்தினர் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தான் முதல்வர் வேட்பாளர்... கூட்டணிக்கு வாங்க... செங்கோட்டையன் அழைப்பு...!