×
 

பாமகவை திருட முயற்சி... அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு... 180 பக்க ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார்...!

தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னத்தை தனக்கு ஒதுக்கி விட்டதாகவும், யாராலும் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 16 குற்றச்சாட்டுகளை கூறி அன்புமணியை தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராமதாஸ் நீக்கி விட்டார். பாமக கட்சி மற்றும் மாம்பழம் சின்னத்திற்கு அன்புமணி எந்த உரிமையும் கோரக் கூடாது என்றும் கட் அண்ட் கறாராக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் பதவியை தாமே எடுத்துக் கொண்ட ராமதாஸ், செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமனம் செய்தார். தற்போது பாமகவில் மாம்பழ சங்கம் யாருக்கு என்ற மோதல் தீவிரமடைந்துள்ளது. 

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. உடனே ராமதாஸ் மாம்பழ சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அன்புமணி ராமதாஸோ தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னத்தை தனக்கு ஒதுக்கி விட்டதாகவும், யாராலும் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இணைவு ... உண்மையை போட்டு உடைத்த கணேஷ் குமார்...!

இந்நிலையில் மாம்பழ சின்னத்தை கைப்பற்றப் போவது தந்தையா, மகனா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் மாம்பழ சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் அனுப்பியுள்ள முக்கிய ஆவணங்கள் குறித்து பாமக தேர்தல் பணி குழு தலைவர் சதாசிவம் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: பாமக தலைவராக அன்புமணி இருந்தபோது அவரை நியமித்து ராமதாஸ் அவர்கள் தான் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி பொய்யான செய்தி தகவலை தந்துள்ளார் பொதுக்குழுவில் நிறைவேறாத தீர்மானத்தை பொய்யாக முன்வைத்து அலுவலகத்தை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளோம் என்ற ஒரு தீர்மானத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு பொய்யாக தெரிவித்துள்ளார் தனது மனைவியின் பெயரில் உள்ள இல்லத்திற்கு கட்சி அலுவலகம் செயல்படும் எனக் கூறி ஒரு போலியான ஆவணத்தை தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்துள்ளார். 

அன்புமணி அனுப்பிய கடிதத்தில் தன் கையெழுத்தை மட்டும் போட்டுள்ளார். கட்சி  அலுவலகத்தின்  முகவரி மாற்றம் என்பது தொடர்பான  தீர்மானம் பொதுக்குழுவில் வரவே இல்லை ,  அன்புமணியே ஒரு தீர்மானத்தை கூடுதலாக சேர்த்து அனுப்பியுள்ளார் அது தவறானது. 

அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது முதல்,  ஒவ்வொன்றும் தேர்தல் ஆணையத்திற்கு பாமக ராமதாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் அனைத்திலும் அன்புமணி பொய்யான தகவலை தந்து வருகிறார்,  பாட்டாளி மக்கள் கட்சியை திருடுவதற்கு அன்புமணி செயல்பட்டு வருகிறார், 
 

180 பக்கம் கொண்ட அனைத்து ஆவணங்களையும் ராமதாஸ் சார்பில் கொடுத்துள்ளோம். பீகார் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்வதாக ஆணையம் சார்பில்  தெரிவித்துள்ளனர். அன்புமணியிடம் கட்சியை ஒப்படைத்த பிறகு ,  பாமக மிகப்பெரிய தோல்வியை  சந்தித்து வருகிறது என குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: அன்புமணியை அரெஸ்ட் பண்ணுங்க... போர்கொடி தூக்கிய பாமக எம்எல்ஏ அருள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share