#BREAKING: பாமகவின் தலைவர் ராமதாஸ் தான்… பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம்!
பாமகவின் தலைவராக ராமதாஸ் தொடர்பார் என்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடியது. புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது பாமகவின் தலைவராக ராமதாஸ் தொடர்பார். என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் தலைவர் என அறிவிக்கப்பட்டதும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எழுந்து நின்று கரங்களை கூப்பி நன்றி தெரிவித்தார் ராமதாஸ். அப்போது, பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களைக் காட்டி ஆரவாரம் செய்தனர். மருத்துவர் ஐயா வாழ்க என முழக்கமிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது! அன்புமணி இடத்தில் ஸ்ரீகாந்தி... ராமதாஸ் பொதுக்குழுவில் பரபரப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் 2025 மே மாதம் 30 ஆம் தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் தான் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாஸுக்கு மட்டுமே வழங்கி சிறப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படியேறி வந்த அன்புமணி... மனசு இறங்காத ராமதாஸ்... ஒற்றை வார்த்தையில் ஜோலியை முடித்த பாமக நிறுவனர்...!
இதனிடையே, மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, ஐயாவின் முடிவே இறுதி என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கூட்டத்தில் பாமகவினர் பங்கேற்று உள்ளனர். ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 4000 மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸின் செயல் தலைவர் பதவியும் பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.