×
 

அன்புமணி கூட தொடர்பு வச்சுக்கிட்டா அவ்ளோதான்! கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை...

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாமக விதிகளில் திருத்தம் செய்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸ் உருவாக்கப்பட்ட பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை தொடர்பாக கூறப்பட்டது. அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ராமதாசுடன் இருப்பவர்கள் மற்றும் ராமதாஸ் பற்றியும் மிகவும் அவதூறாக அநாகரீதமான மனதை புண்படுத்தும் செய்திகளை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. ராமதாஸ் தான் கட்சியின் தலைவர் என்றும் நிறுவனர் மற்றும் செயல் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது.

ராமதாஸின் அனுமதி பெறாமல் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கட்சியை பிளவுபடுத்த அன்புமணி செயற்பட்டதாகவே கருதப்படுவதாகவும் அன்புமணி ராமதாஸை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தொலைக்காட்சியை திட்டமிட்டு அன்புமணி அபகரித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பாமகவின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு அன்புமணி கைப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாசை அன்புமணி அவமதித்து விட்டதாகவும் பாமக தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு அன்புமணி வேறு இடத்திற்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. இதுபோல அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. முதல் முறை விளக்கம் அளிக்காத நிலையில் இரண்டாவது முறையும் அவகாசம் கொடுக்கப்பட்டது. அப்போதும் அன்புமணி விளக்கம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்… ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு

பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்பு மணியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார். கட்சி விதிகள் படியும் ஜனநாயக முறைப்படியும் விளக்கம் தர அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்ட பின்னரே அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அன்புமணியுடன் இருப்பவர்கள் தனி கட்சி போல் செயல்படுவதாகவும் தெரிவித்தார். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான் தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையின் பெயரில் அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி கட்டளையை மீறி அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். 

இதையும் படிங்க: அன்புமணி உரிமை கோரினால் எங்களையும் கேட்கணும்! ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share