#BREAKING: அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும்... பாமக என் உழைப்பு! ராமதாஸ் திட்டவட்டம்
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனியாக கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. முதல் முறை விளக்கம் அளிக்காத நிலையில் இரண்டாவது முறையும் அவகாசம் கொடுக்கப்பட்டது. அப்போதும் அன்புமணி விளக்கம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்பு மணியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார். கட்சி விதிகள் படியும் ஜனநாயக முறைப்படியும் விளக்கம் தர அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்ட பின்னரே அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அன்புமணியுடன் இருப்பவர்கள் தனி கட்சி போல் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான் தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையின் பெயரில் அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி கட்டளையை மீறி அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார். பாமக நான் ஓடி ஓடி உழைத்து உருவாக்கிய கட்சி என்று தெரிவித்தார். ஒரு தனி மனிதராக ராமதாஸ் உருவாக்கிய கட்சி பாமக என்றும் அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது எனவும் தெரிவித்தார். கஞ்சியோ கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று பாமகவை உருவாக்கி உள்ளேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அன்புமணி கப்சிப்!! 100 நாளைக்கு மவுன விரதம்!! நடைபயணம் முடியுற வரை பேட்டி கிடையாது!!
அன்புமணியை பாமகவில் இருந்த நீக்கியது கட்சிக்கு பின்னடைவு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 46 ஆண்டுகள் பாடுபட்டு வளர்த்த கட்சி அன்புமணியால் அழிகிறதே என மனம் பொறுக்கவில்லை என்றும் அதனால் தான் அவரை நீக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். லண்டனில் இருந்து வாங்கி வந்து சோபாவில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் யார் யாரை வேவு பார்ப்பது என்றும் இதைவிட மோசமான செயல் இருக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தரமான கூட்டணி இருக்கு! தளராம இருங்க... தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் நம்பிக்கை