×
 

ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம்ஏர்வாடி அருகே இரு சக்கர மோட்டார் சைக்கிள்  மீது கார் மோதிய விபத்தில் அப்பா மகள் மருமகன் உள்ளிட்ட   3 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்த லாடசாமி, அவரது மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி ஆகியோர் அன்றாட வாழ்வாதாரத்திற்காக தெருவோரங்களில் மற்றும் கிராமப்புறங்களில் கிடக்கும் காலி பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று அவர்கள் ஏர்வாடி பகுதிக்குச் சென்று, அங்குள்ள கிராமங்களில் காலி பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்துவிட்டு, உணவு வாங்குவதற்காக திருப்புல்லாணி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நின்றிருந்த லாரி மீது மோதிய வேன்... உடல் சிதைந்து தம்பதி துடிதுடித்து பலி... 13 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...!

அப்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று, அவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் இருந்து வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட லாடசாமி, பஞ்சவர்ணம் மற்றும் புல்லாணி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஏர்வாடி காவல் நிலைய போலீசார், உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவியும் இழப்பீடும் வழங்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி... ஓவர் ஸ்பீடில் பனைமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுக்கிய கார்... 2 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share