×
 

காலையிலேயே பயங்கரம்...!! நேருக்கு நேர் மோதிய 2 கார்கள்... ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் பலி...!

ராமநாதபுரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஐயப்ப பக்தர்கள் வந்து கொண்டிருந்த காரும் கீழக்கரையிலிருந்து சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேர் பலியான ஒரு சோகமான நிகழ்வு இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. 

ஆந்திராவில் விஜய் ரெங்கநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இருந்து ஐந்து ஐயப்ப பக்தர்கள் இராமேஸ்வரதரதில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் ராமேஸ்வரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே  காரை நிறுத்தி விட்டு காரல் தூங்கி கொண்டிருந்துள்ளனர்.

 அப்போது கீழக்கரையை சேர்ந்த கார் ஒன்று ஏர்வாடியில் இருந்து கீழக்கரை  நோக்கி 7பேருடன் வந்த போது நின்று கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த காரின்  பின்புறம் வேகமாக மோதியதில் 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலும், ஒருவர் இளைஞர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் என மொத்தம் 5 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 

மேலும் கீழக்கரையைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என 07 பேர் பலத்த காயத்துடன்  ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார்  விபத்தில் உயிரிழந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (30), ஆந்திராவை சேர்ந்த ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு(40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய ஐந்து பேரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த கீழக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவர் வந்து கவலைக்கடமான நிலையில் மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதுமுள்ள ஐந்து பேருக்குராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து ராமேஸ்வரம் நோக்கி சென்றவர்களின் காரும் கீழக்கரையில் சேர்ந்த இளைஞர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரத்தில் ஒரு பரபரப்பையும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING வேகத்தில் பறந்த கார் மரத்தில் மோதி விபத்து... 3 மருத்து மாணவர்கள் துடிதுடித்து பலி...!

இதையும் படிங்க: அதிவேகத்தால் நடந்த பயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 4 இளைஞர்கள் துடிதுடித்து பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share