×
 

#BREAKING ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை? - தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு...! 

இன்று காலை முதலே ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவிய வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில இந்த புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தியில் இன்று மதியத்திற்குள் சென்யார் புயல் தீவிரமடையும் அதே நேரத்தில், குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. 

இதனால் இன்று, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் தல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இன்று காலை முதலே ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. ராமேஸ்வரம் தீவு பகுதிகளான வேர்க்கோடு, திட்டக்குடி, மேலவாசல் வீதி, பர்வதம், புதுரோடு, மருதுபாண்டியர் நகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு தந்து விட்டு விட்டு  கனமழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக விட்டு விட்டு  மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்ததால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் கனமழையை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். 
 

இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம் : ராமாநாதபுரத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்... போலீஸ் குவிப்பு...!

இதையும் படிங்க: கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - சேலம் , கடலூர் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share