இன்று முதல் கடலில் கால் வைக்க மாட்டோம்... அதிரடி முடிவெடுத்த ராமேஸ்வரம் மீனவர்கள் - அரசுக்கு சவால்...!
இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற நிலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு வருகின்ற 13ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் 15ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் 19ஆம் தேதி ரயில் மறியல் போராட்டமும் நடத்தப் போவதாக மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் கால வரையற்ற நிலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த விசைப்படகு நாட்டு படகுகளை இலங்கை கடற்படை கைது செய்து மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் என சிறை தண்டனை விதிக்கிறது இலங்கை சிறையில் வாடி வரும் 66 மீனவர்களையும் நல்ல நிலையில் உள்ள படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் இந்த போராட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளத்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சேதம் அடைந்த விசைப்படகுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரண நிதியில் அதில் விடுபட்ட விசைப்பலகைகளுக்கு நாட்டுப் படகுகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக முதல்வர் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து மீனவர்களை மீட்பதற்கு குரல் கொடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அந்தரத்தில் ஊசலாடிய 5 எம்.பி.க்களின் உயிர்... மரண பயத்தைக் காட்டிய ஏர் இந்தியா - நடந்தது என்ன?
வேலை நிறுத்தம் காரணமாக 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தும் வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வேலை இழப்பு நான் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமாக காத்திருக்கும் முக்கிய அதிமுக புள்ளிகள்... இபிஎஸை டரியல் ஆக்கிய ஆர்.எஸ்.பாரதி...!