தமிழக அரசுக்கு இடியை இறங்கிய மீனவர்கள்... ராமேஸ்வரத்தில் இன்று தடாலடி மாற்றம்... ஒரே நாளில் இவ்வளவு நஷ்டமா?
நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
படகு பழுதாகி இலங்கை கடல் பகுதிக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை கடற்படையை கண்டித்து, மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான 5ம் தேதி அனுமதிச்சிட்டை பெற்று சுமார் 500 மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற ரமேஷ் என்போருக்கு சொந்தமான விசைப்படகு படகு பழுதாகி நெடுந்திவு கடல் பகுதிக்குள் சென்றுள்ளது .
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 11 பேரை கைது மீனவர்களிடம் விசாரணை நடத்திய போது மீனவர்கள் தங்கள் மீன் பிடிக்க வந்த படகு பழுதாகி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்... இலங்கை கடற்படை அட்டூழியம்...!
இதை அடுத்து இலங்கை கடப்படையினர் முறையாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வருகின்ற 21 ஆம் தேதி வரை சிறையில் அடைத்துள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை கைது செய்வது தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். நான் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இருந்து பத்து கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியதுமே மீனவருக்கு நேர்ந்த பயங்கரம்... உயிருக்கு ஊசலாடும் மேலும் 3 பேர்... நடந்தது என்ன?