இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி.. சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். தொடரில் முதன்முறையாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 18 வருட கனவை நினைவாக்கி கொண்டது பெங்களூரு அணி...கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணிக்கு வாழ்த்து மழை பொழிகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்து செய்தியில், அருமை பெங்களூரு அணி...ஆச்சரியங்கள் நிறைந்த சீசனுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் முடிவு என கூறியுள்ளார். விராட் கோலி! நீங்கள் பல வருடங்களாக இந்தக் கனவைச் சுமந்து வருகிறீர்கள், இன்றிரவு, கிரீடம் உங்களுக்கு உண்மையிலேயே பொருந்தும் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரல! யார் அந்த சார்? முதல்வரை வாட்டி எடுத்த நயினார்..!
மேலும், அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஒரு வலுவான மறுபிரவேசத்தை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அறிவுச் சூரியனின் பிறந்தநாள்..! கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!