நாளை புதிய புயல் சின்னம்... “ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட்...” எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுப்பு?
குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையக்கூடும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையக்கூடும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவிய வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தியில் இன்று மதியத்திற்குள் சென்யார் புயல் தீவிரமடையும் அதே நேரத்தில், குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரியலூர், கோவை, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களிலும் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை? - தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு...!
நாளை (நவ.27) தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் (நவ.28) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநிலை 29ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் அறிவிக்கப்பட்டள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது போர்? - ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் சரமாரி குண்டுவீச்சு... குழந்தைகள் பலி...!