×
 

கோடை வெயிலுக்கு குட்பை! இன்றும் நாளையும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

நாளை முதல் 18, 19, 20 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பநிலை 2-4 டிகிரி வரை குறையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல அதிகரித்து வந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் இதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இன்று பெய்த திடீர் மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று மதியம் காரைக்கால், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இன்றும் (மார்ச் 18), நாளையும் (மார்ச் 19) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

மார்ச் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவி வரும் வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இதனால் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிர்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share