×
 
☰

அவுட்சோர்சிங் அரசாணையை ரத்து செய்க: தமிழக அரசுக்கு சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் வலியுறுத்தல்!

அவுட்சோர்சிங்கிற்கு முழுமையாக வழி வகுக்கிற அயல் மனித வள கழகம் நியமனத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என பெ சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் தேர்வு செய்து நியமிக்கும் முழுப் பொறுப்பையும் சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளருமான பெ. சண்முகம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துவதற்கும், காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கும் மாறாக, அவுட்சோர்சிங் நடைமுறையை நிறுவனமயமாக்கும் வகையில் தமிழக அரசு அண்மையில் அரசிதழ் வெளியிட்டிருந்தது. இதன்படி, அரசுத் துறைகளுக்கான அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாகவே ஒப்பந்ததாரர்கள் வழியே நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ள பெ. சண்முகம், "அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறைக்கு முழுமையாக வழிவகுக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த விபரீத முடிவு கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை உறுதி செய்யும் இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், இளைஞர்களின் நிரந்தர அரசு வேலை கனவையும் இந்த அவுட்சோர்சிங் முறை அடியோடு தகர்த்துவிடும்.

இதையும் படிங்க: மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா? சட்டத்திருத்தம் கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை இடைத்தரகர் நிறுவனம்போல் மாற்றி, ஒப்பந்தப் பணியாளர் முறையை அரசுத் துறைகளில் நிரந்தரமாக்கும் இந்த அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அரசுத் துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை வெளிப்படையான போட்டித் தேர்வுகள் மூலம் முறையான காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணிகளாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share