×
 

ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம்... ஆணையை வழங்கி சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்...!

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டின் பத்திரிகைத் துறை, சமூகத்தின் குரலாகவும், உண்மையின் காவலராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இத்துறையில் ஈடுபட்டு, ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறும் பத்திரிகையாளர்கள், தங்கள் சேவையின் பலனாக அரசின் உதவியைப் பெற விரும்புவது இயல்பானது. இதை முன்னெடுத்து, தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம், பத்திரிகையாளர்களின் நலனை உறுதிப்படுத்துவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் பாதுகாப்பை வழங்குகிறது. பணியில் இருக்கும் போது சமூகத்திற்காக தங்களது பணியை அயராது செய்த பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு வாழ்வாதாரத்தை காத்துக் கொள்வது என்பது சவாலான விஷயமாக உருவாகிறது. அரசு ஊழியர்களைப் போலவே ஓய்வூதியம் வழங்கப்பட்டால் ஏழை எளிய ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

பத்திரிகையாளர்கள், சமூக மாற்றங்களைப் பதிவு செய்து, ஜனநாயகத்தின் அடித்தளமாக இருந்தாலும், அவர்களின் ஓய்வுக்குப் பின் நிதி சிரமங்கள் எதிர்கொள்வது பொதுவான சிக்கல். இதை உணர்ந்த தமிழ்நாடு அரசு, 2000களின் ஆரம்பத்தில் இருந்தே பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

இதையும் படிங்க: தந்தை பெரியார் இல்லைனா... ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆரவாரப் பேச்சு...!

இந்த நிலையில் ஓய்வு பெற்ற அச்சு ஊடகங்களில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஓய்வூதிய ஆணையை முதல்வர் வழங்கி உள்ளார். 42 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளமாக 10 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று ஓய்வூதிய ஆணையை வழங்கி உள்ளார். மாதந்தோறும் 12 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கைவிடமாட்டோம்... ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம்... சீராய்வு மனு குறித்து முதல்வருடன் அன்பில் மகேஷ் தீவிர ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share