×
 

அவிநாசி ரிதன்யா வழக்கில் மீண்டும் அதிரடி... மாமியாருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு...!

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்தவர் ரிதன்யா. 27 வயதான இவருக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று அன்று கவின் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

ஆனால் கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரிதன்யா, ஜூன் 28 ஆம் தேதி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு, ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார்.

தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோவாக தனது வாக்குமூலத்தை அனுப்பிவிட்டு ரிதன்யா உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பிரதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து மாமியார் சித்ராதேவி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமீன் வழங்க ரிதன்யா பெற்றோர் ஆட்சேபனை தெரிவித்து இடையீட்டு மனு அளித்திருந்தால் இன்று இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது‌.

இதில் சித்ராதேவி தரப்பு வழக்கறிஞர் அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர் சான்றிதழ்களை வழங்கி இருந்தார் எனினும் வழக்கின் தீவிரம் காரணமாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்து செய்து மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவு.

இதையும் படிங்க: ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!

இதையும் படிங்க: ரிதன்யாவின் மாமியார் கைது.. உடல்நிலையை காரணம் காட்டி தப்பியவரை அதிரடியாக கைது செய்த போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share