வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!
மதுரை அலங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகை, 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
மதுரை அலங்காநல்லூர் அருகே பொதும்பு வானவில் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (50) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மனைவி ரினோ மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றார்
ரினோ தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிட்டு இன்று வீடு திரும்பியுள்ளார். இதனிடையே, இவரது வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 100 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் , மற்றும் செல்போன் மற்றும் வீட்டின் சி.சி.டி.வி. ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை திருடி விட்டு காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது,
அதிகாலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரினோ திருட்டு குறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதே போல் அருகிலேயே மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!
சம்பவம் அறிந்து விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் தடயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் ஸ்ரீ நாதன், சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
100 சவரன் தங்க நகை மற்றும் 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் திருட்டு நடந்த சம்பவம் மதுரையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இதையும் படிங்க: திமுக வேட்பாளர் வீட்டு கொள்ளையில் டுவிஸ்ட்.. மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட மருமகள்... ரகசிய காதலுடன் கைது...!