ரோஸ் டே சர்ப்ரைஸ்... நாசமா போச்சு..! கணவனுக்கு பரிசு கொடுத்த மனைவி மீது வழக்கு..!
பூரண மதுவிலக்கு உள்ள பீகார் மாநிலத்தில் ரோஸ் டே செலிப்ரேஷனுக்கு கணவனுக்கு மது கொடுத்த மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலர் தினத்தை ஒட்டி ரோஸ் டே கொண்டாடப்படுவது இன்று இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு பழக்கமாக மாறியிருக்கிறது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி, காதலர் தின வாரம் என்று அழைக்கப்படும் ஏழு நாட்கள் கொண்டாட்டம் நடைபெறும். அதில் முதல் நாள் தான் ரோஸ் டே. இந்த நாளில் மக்கள் தங்கள் காதலர்கள், நண்பர்கள், அன்புக்குரியவர்களுக்கு ரோஜா மலர்களை பரிசாக அளித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.
ரோஜா என்றாலே காதல், அழகு, அன்பு என்று நினைவுக்கு வரும். பண்டைய காலத்திலிருந்தே ரோஜா மலர்கள் உணர்ச்சிகளை சொல்லும் மொழியாக இருந்து வருகிறது. ரோஸ் டே கொண்டாட்டம் வெறும் பரிசு கொடுப்பதோடு நின்றுவிடுவதில்லை. பலர் கவிதை எழுதி, கடிதம் எழுதி, ரோஜாவுடன் சேர்த்து கொடுப்பார்கள். சிலர் சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்விப்பார்கள். கல்லூரிகளில் ரோஜா விற்கும் ஸ்டால்கள், காதல் பாடல்கள் ஒலிக்கும் சூழல், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் குழு மகிழ்ச்சி எல்லாம் இந்த நாளை சிறப்பாக்கும்.
காதலில் இருப்பவர்கள் மட்டுமின்றி, நட்பு வட்டாரத்திலும், குடும்பத்திலும் கூட ரோஜா கொடுத்து அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ரோஸ் டேவை கொண்டாடுவதற்காக பீகாரில் ஒரு பெண் தன் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த சர்ப்ரைஸ் வழக்கில் முடிந்ததுதான் சோகம். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காஞ்சன் தேவி என்ற பெண் தனது கணவருக்கு காதலர் தினத்தை ஒட்டி தினமும் பரிசு வழங்கி வந்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கு... விசாரணை தீவிரம்... போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்..!
அதை இணையதளத்திலும் பதிவிட்டு வருகிறார். அப்படி ரோஸ் டே செலிப்ரேஷனை செய்துள்ளார். அப்போது கணவருக்கு ரோஜா பூக்களுடன் மதுவை கோப்பையில் ஊற்றி கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார் மனைவி காஞ்சன் தேவி. இதனை அவர் இணையதளத்தில் பதிவேற்ற ஆப்பு தேடி வந்தது. பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் கணவருக்கு மது கொடுத்த மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மான நஷ்ட வழக்கு... 12 ஆம் தேதி வரைக்கும் டைம்..! ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு..!